மணிரத்னம் இந்திய அளவில் அறியப்படும் தமிழ் திரைப்பட இயக்குனர்களுள் ஒருவர் ஆவார். இவர் திரையுலகில் இயக்கம், தயாரிப்பு, திரைக்கதை எழுத்தாளர் என பல்வேறு திரைத்துறையில் பங்களித்து பிரபலமாகியுள்ளார். இவர் தமிழ் திரை உலகில் அனுபல்லவி, மௌன ராகம், நாயகன் உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். தற்போது பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இந்த திரைப்படத்தில் சியான் விக்ரம், கார்த்திக், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, சரத்குமார், பார்த்திபன், ஜெயராம், பிரகாஷ்ராஜ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் திரைக்கு வர உள்ளது. இந்த திரைப்படத்தில் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்து, ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பாடல்கள் மற்றும் பின்னணி இசை கோர்ப்புக்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய காட்சிகளின் பின்னணி கோப்புகளை மணிரத்தினம் விவரிக்க ஏ.ஆர். ரகுமான் மற்றும் டிரம்ஸ் சிவமணி உள்ளிட்ட இசைக்கலைஞர்கள் அதனை கவனிப்பது போன்று புதிய வீடியோவை இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.