Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி இராசிக்கு… “இடையூறாக செயல்பட்டவர் விலகி போவார்”.. நல்ல பெயர் வாங்குவீர்கள்..!!

கன்னி ராசி அன்பர்களே..!! மனதில் சில மாற்றங்களை நீங்கள் பின்பற்றுவீர்கள். இடையூறாக செயல்பட்டவர் விலகி போவார். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். ஆதாய பணவரவு கிடைக்கும் பணியாளர்கள் பரிசு பாராட்டுகளை பெறக்கூடும். இன்று எதிலும் அதிக சிரமம் எடுத்து வேலை செய்யக் கூடிய சூழல் இருக்கும். மன அமைதி இருக்கும். காலம் தவறாத பேச்சினால் அனைவரிடமும் நல்ல பெயர் வாங்குவீர்கள். இன்று ஓரளவு அதிர்ஷ்டமான வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைத்திருக்கும்.

சுபகாரியப் பேச்சுகள் நல்லபடியாக நடக்கும். திருமண வயதில் உள்ளவர்களுக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கும். இன்று உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கும் நல்ல முன்னேற்றமான சூழ்நிலை இருக்கும். கொடுக்கல்வாங்கல் விஷயங்கள் கூட ஓரளவு சிறப்பை கொடுக்கும். இன்றைய நாள் வெற்றி பெறும் நாளாகவே இருக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறுவார்கள். ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் முக்கிய பணியையும் மேற்கொள்வார்கள்.

சக மாணவரின் ஒத்துழைப்பும் உங்களுக்கு கிடைக்கும். இன்றைய நாள் மனம் மகிழ்ச்சி பொங்கும் நாளாகவே இருக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் அனைத்து காரியம் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்

Categories

Tech |