பைனான்ஸ் அதிபரை கத்தியால் குத்தி மர்ம நபர்கள் 9 லட்ச ரூபாயை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மூக்குடி பகுதியில் சுந்தரலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகின்றார். இந்நிலையில் சுந்தரலிங்கத்தின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் அவரை கத்தியால் குத்தியுள்ளார். அதன் பிறகு மிளகாய் பொடியை சுந்தரலிங்கத்தின் முகத்தில் தூவி விட்டு பீரோவில் இருந்த 9 லட்ச ரூபாயை திருடிவிட்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதனால் படுகாயமடைந்த சுந்தரலிங்கத்தை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து சுந்தரலிங்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பெரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.