துலாம் ராசி அன்பர்களே..!! இன்று திட்டமிட்டு செயல்படுவதால் பணிகளில் உரிய நன்மை கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் அதிக உழைப்பு அவசியமாக இருக்கும். சேமிப்பு பணம் முக்கிய செலவுகளுக்கு பயன்படும். சுற்றுச் சூழ்நிலை தொந்தரவினால் நித்திரை கொஞ்சம் கெடலாம். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக்கொண்டு நித்திரைக்குச் செல்வது மிகவும் சிறப்பு. இன்று தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். உடன் பணிபுரியும் நபர்கள் மூலம் நன்மை உண்டாகும்.
பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். அரசியல் துறையினர் புதிய முடிவுகள் எடுக்கும் பொழுது கவனமாக எடுங்கள். குடும்பத்தில் இன்று ஒற்றுமை இருக்கும். சுபகாரியப் பேச்சுக்கள் நடக்க கூடிய சூழல் இருக்கும். இன்று கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள் பழைய பாக்கிகளை வசூல் செய்யும் போது நிதானத்தை கடைபிடியுங்கள். இன்று மாணவ கண்மணிகள் நல்ல முன்னேற்றமான சூழ்நிலையை பெறக்கூடும்.
வெற்றி வாய்ப்புக்கள் வந்து குவியும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள், அனைத்து காரியமும் நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்