Categories
உலக செய்திகள்

இவர் மேல தான் சந்தேகம்…! “உலகையே உலுக்கிய கொலை வழக்கு”…. பிரான்ஸ் போலீசாரின் அதிரடி நடவடிக்கை….!!

பிரான்ஸ் காவல்துறையினர் உலகையே உலுக்கிய சவுதி ஊடகவியலாளர் கொலை வழக்கில் தற்போது சந்தேகத்திற்குரிய நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டில் சவுதி அரேபியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற பத்திரிகையாளரான ஜமால் கஷோகி மிக கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் சவுதி அரேபிய அரசர், அந்நாட்டு மன்னர் மற்றும் இளவரசர்களை அந்த பத்திரிக்கையாளர் கடுமையாக விமர்சித்ததால் தான் இந்த கொலை சம்பவம் அரங்கேறியுள்ளதாக கூறப்பட்டது.

அதேபோல் சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் இந்த படுகொலையின் பின்னணியில் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இருப்பினும் இந்த குற்றச்சாட்டினை சவுதி அரசு முற்றிலுமாக மறுத்தது. இந்நிலையில் பிரான்ஸ் காவல்துறையினர் பத்திரிக்கையாளர் ஜமால் கொலை சம்பவத்தில் சந்தேகத்திற்கிடமாக Khalid Alotaibi ( 33 ) என்ற நபரை கைது செய்துள்ளனர். மேலும் அந்த நபர் காவலாளியாக சவுதி அரண்மனையில் பணியாற்றினார் என்று கூறப்படுகிறது.

ஆனால் பாரிசில் உள்ள சவுதி தூதரகம் கைது செய்யப்பட்ட அந்த நபருக்கும் பத்திரிக்கையாளரின் கொலை வழக்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறி அவரை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியுள்ளது. இருப்பினும் பிரான்ஸ் அரசு அவர் ஜமால் கொலைவழக்கில் உண்மையாகவே சம்மந்தப்பட்டுள்ளாரா என்பதை உறுதிப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதன் பிறகு அவர் மீதான குற்றம் நிரூபணமானால் பிரான்ஸ் அரசு வழக்கறிஞர்கள் முன் Khalid ஆஜர்படுத்தப்படுவார்.

Categories

Tech |