Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக இராசிக்கு… “திட்டமிட்ட இலக்கு நிறைவேறும்”.. சுப செய்திகள் வந்து சேரும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று திட்டமிட்டு செயல்படுவதால் பணிகளில் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். முன்னர் செய்த நல்ல செயலுக்கு உரிய நல்ல பலன் இன்று கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு எளிதாக நிறைவேறும். உபரி பண வருமானம் கிடைக்கும். எதிர்பார்த்த சுப செய்திகள் வந்து சேரும். இன்று விருந்து விழாவில் கலந்து கொள்ளக் கூடிய வாய்ப்புக்கள் கிடைக்கும். இன்று பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடக்கவில்லையே என்ற எண்ணம் ஏற்பட்டு பின்னர் சரியாகும்.

வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். இன்று வீடு மனை புதிய சொத்துக்கள் வாங்கும் போது கொஞ்சம் கவனமாக வாங்குங்கள். கூடுமானவரை நன்கு விசாரித்து செயல்படுவது மிகவும் நல்லது. இன்று குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். இன்று மற்றவரிடம் மட்டும் ஒரு சில நேரங்களில் வாக்குவாதங்கள் ஏற்படக்கூடும். அதை மட்டும் நீங்கள் கவனத்தில் கொள்ளுங்கள்.

இன்று மாணவ கண்மணிகளுக்கு நல்ல முன்னேற்றமான சூழ்நிலை இருக்கும். இருந்தாலும் படித்த பாடத்தை மட்டும் ஒரு முறை எழுதிப் பாருங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியம் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் ஆரஞ்சு நிறம்

Categories

Tech |