ரயில் தண்டவாளத்தில் ஒருவரின் சடலம் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம்-சோளிங்கர் சாலையில் இருக்கும் மேம்பாலத்தின் கீழ் ரயில் தண்டவாளத்தில் ஆண் ஒருவரின் சடலம் கிடப்பதாக ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அதன்பின் சடலமாக கிடந்த நபர் சிவப்பு, வெள்ளை மற்றும் பச்சை நிறத்தில் டிசைன் போட்ட டீஷர்ட், வெளிர் சந்தன நிற பேண்ட் அணிந்து இருக்கிறார். இவருக்கு 25 வயது இருக்கும். பின்னர் அவரின் உடல், தலை துண்டிக்கப்பட்டு வெவ்வேறு இடத்தில் கிடந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த ரயில்வே காவல்துறையினர் சடலமாக கிடந்தவர் யார் என்பது பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.