Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 2 நாட்கள் வங்கிகள் முடங்கும் அபாயம்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் படிப்படியாக தனியார் மயமாக்க படுவதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவை கண்டித்தும், அதனை வாபஸ் பெறக் கோரியும் நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் அதிகாரிகள் மற்றும் கிளை மேலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

மேலும் வருகிற 16 மற்றும் 17ம் தேதிகளில் நடைபெறும் வேலை நிறுத்தத்தில் கடைநிலை ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை ஈடுபடுவதால், வங்கிகள் முழுவதும் அடைக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் வெங்கடாச்சலம் பேசியதாவது, நாடு முழுவதும் 1,10,000 வங்கிக் கிளைகள் மூடப்படும். மேலும் 10,00,000 ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்க உள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் 80,000 பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

75,000 கிளைகள் மூடப்படுவதால், வங்கி சேவை கடுமையாக பாதிக்கப்படும். வேலை நிறுத்தத்தால் அனைத்து பரிவர்த்தனைகளும் முழுமையாக பாதிக்கப்படும். இதுகுறித்து டெல்லியில் இன்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. வங்கி ஊழியர்களின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டால், போராட்டம் விலக்கிக் கொள்ளப்படும். சமரசம் ஏற்படாத நிலையில், வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நாளில் திட்டமிட்டபடி நடைபெறும் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |