Categories
தேசிய செய்திகள்

சக்தி வாய்ந்த பெண்கள்…. நிர்மலா சீதாராமன் எந்த இடம் பிடித்துள்ளார் தெரியுமா?…நீங்களே பாருங்கள்….!!!!

உலகில் அதிக சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில், மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து, 3-ஆவது முறையாக அந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளார். அமெரிக்க இதழான போர்ப்ஸ் பத்திரிக்கை உலகில் அதிக சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் வருடந்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இந்த ஆண்டு 18-வது முறையாக போர்ப்ஸ் நிறுவனம் 2021 உலகின் அதிக சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் மத்திய நிதி அமைச்சர் இந்த ஆண்டு நிர்மலா சீதாராமன் 37-ஆவது இடத்தையும், சென்ற ஆண்டு 41ஆவது இடத்திலும், 2019-ஆம் ஆண்டு 34-ஆவது இடத்தையும் பிடித்திருந்தார்.

மேலும் இந்தப் பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் 2-ஆவது இடத்தை பிடித்துள்ளார். சென்ற ஆண்டு 3-ஆவது இடத்தில் இருந்த நிலையில், இந்த ஆண்டு 2-ஆவது இடத்திற்கு முன்னேறி முன்னேறி உள்ளார்.

 

Categories

Tech |