Categories
தேசிய செய்திகள்

“சாராயம் வாங்கி தர முடியாது போ”…. ஆத்திரத்தில் தாயார் செய்த வெறிச்செயல்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!!

சாராயம் வாங்கி தர மறுத்த மகனை கத்தியால் அடித்துக் கொன்ற தாயை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் மகன் காணாமல் போனதாக அவர் நாடகமாடியதும் அம்பலமாகியுள்ளது. மும்பை செம்பூர் வாஷிநாக்கா பகுதியை சேர்ந்த பெண் லூர்து மேரி. 52 வயதுடைய லூர்து மேரி தன் மகன் பிரவின் உடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 4-ஆம் தேதி பிரவினிடம் மதுபானம் வாங்கித் தருமாறு கேட்டுள்ளார்.

வாங்கித் தர மறுத்த பிரவினிற்க்கும் லூர்துமேரிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் பிரவின் லூர்து மேரியை தாக்கியுள்ளதாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த தாய் லூர்து மேரி அங்கிருந்த கத்தியை எடுத்து மகன் பிரபுவின் தலையில் தாக்கியதில் பின் மண்டை உடைந்து ரத்தம் வெள்ளத்தில் கீழே விழுந்தார். இதையடுத்து லூர்துமேரி படுகாயம் அடைந்து கிடந்த மகனை கண்டுகொள்ளாமல், தன் வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். பிரவினை தேடிவந்த நண்பர்களிடம் பிரவின் காணவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் தன் கணவரிடம் மகன் காணாமல் போனதாக தெரிவித்துள்ளார். ஆனால் கணவர் மனைவியின் பேச்சை நம்பவில்லை.  தன் மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டதால், 2 நாட்கள் கழித்து கடந்த 6-ஆம் தேதி லூர்துமேரி அழைத்துக்கொண்டு கணவர் வீட்டிற்கு சென்றார். அங்கு ரத்த வெள்ளத்தில் மகன் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந் அவர், ஆர்.சி.எப் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த வழக்கின் அடிப்படையில், காவல்துறையினர் அங்கு சென்று பிரவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், லூர்துமேரி பெற்ற மகனை கத்தியால் தாக்கி கொன்று விட்டு நாடகமாடியதும் தெரியவந்தது. இதையடுத்து லூர்துமேரி மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |