தமிழ் சினிமாவில் இயக்குனராக மட்டுமல்லாமல், நடிகராகவும் ஜொலித்து வருபவர் சமுத்திரகனி. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் நான் கடவுள் இல்லை மற்றும் இயக்குனர் ராஜேந்திர சக்கரவர்த்தி இயக்கத்தில் யாவரும் வல்லவரே போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
மேலும் தனுஷின் மாறன், சிவகார்த்திகேயனின் டான், ஐயப்பனும் கோசியும் படத்தின் தெலுங்கு ரீமேக்கான பிம்லா நாயக், மகேஷ்பாபுவின் சர்க்காரு வாரி பாட்டா மற்றும் அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக்காக பிரசாந்த் நடித்துள்ள அந்தகன் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசனின் இந்தியன்2 போன்ற திரைப்படங்களில் நடிகர் சமுத்திரக்கனியும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். முன்னதாக பா. ரஞ்சித்தின் நீலம் புரோடக்சன், கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ், லிட்டில் ரெட் பார் பிலிம்ஸ் மற்றும் ப்ரொடக்ஷன் சேர்ந்து தயாரித்து வழங்கும் ரைட்டர் திரைப்படத்தில் போலீசாக சமுத்திரக்கனி நடித்துள்ளார்.
இயக்குனர் பிராங்கிளின் ஜேக்கப் இயக்கத்தில் தயாராகியுள்ள ரைட்டர் திரைப்படம் வருகிற டிசம்பர் 24-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சமுத்திரக்கனியுடன் சேர்ந்து திலீபன், இனியா, ஹரிகிருஷ்ணன், சுப்ரமணியன், சிவா, மகேஸ்வரி, லிஸ்ஸி ஆண்டனி போன்றோர் நடித்துள்ளனர். மேலும் மணிகண்டன் சிவகுமார் படத்தொகுப்பு செய்துள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்தநிலையில், ரைட்டர் திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியானது.