Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலாவுக்கு ஷாக்…! அது அவுங்க பிரச்சனை…! அமமுக என்ன செய்யும் ? நழுவி சென்ற டிடிவி …!!

செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்,  அதிமுக ஆட்சியில் ஓபிஎஸ், இபிஎஸ்ஸை ஒரு சிலர் இயக்குகிறார்கள் என்பதை காலம் உங்களுக்கு உணர்த்தும். உள்ளாட்சி தேர்தலில் ரஜினியிடம் சசிகலா ஆதரவு கேட்பது குறித்து சசிகலாவிடம் தான் கேட்க வேண்டும். சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் என உரிமை கொண்டாடுகிறார்.

அதை ஓபிஎஸ், இபிஎஸ் ஏற்று கொள்ளமாட்டோம், சேர்த்துக்கொள்ள மாட்டோம் என சொல்லுவது அவுங்க பிரச்சனை, இதை அவுங்க பார்த்துக்கொள்வார்கள். இதற்க்கு அமமுக என்ன சொல்ல முடியும். அதிமுகவில் உள்ள ஸ்லீப்பர் செல் உரிய நேரத்தில் வெளியே வருவார்கள் என தெரிவித்தார்.

அமமுகவும், அதிமுகவும் இணைய வாய்ப்புள்ளதா என்று செய்தியாளர் கேட்டபோது, எங்களுடைய இலக்கே அம்மாவுடைய கட்சியை மீட்டெடுப்பது, அம்மாவுடைய உண்மையான ஆட்சியை தமிழ்நாட்டிற்கு கொடுப்பது. அதற்காக நாங்கள் தேர்தல் வெற்றி தோல்விக்கு எல்லாம் அஞ்சுகின்ற தொண்டர்களுடைய இயக்கம் கிடையாது, நாங்கள் தொடர்ந்து போராடி எங்கள் இலக்கை நிச்சயம் பெறுவோம் என கூறினார்.

Categories

Tech |