ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்தி மும்பை அணி வெற்றி பெற்றது .
8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது .கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி இப்போட்டி நடைபெற்று வருகிறது .இப்போட்டி நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை – ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதியது .இதில் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே மும்பை அணி ஆதிக்கம் செலுத்தியது.
இதில் மும்பை அணி வீரர்கள் ஹசிங்கோ 3 -வது நிமிடத்திலும் ,பிபின் சிங்க் 17 – வது நிமிடத்திலும் மற்றும் இகோர் அன்குளோ 24-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர் .இதனால் மும்பை அணி 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது .இதன்பிறகு இரண்டாவது பாதி ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் அணி வீரர்களான கோமல் தட்டால் 48-வது நிமிடத்திலும் ,ஏலி சபியா 55-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இதன்பிறகு 70-வது நிமிடத்தில் மும்பை அணி வீரர் யகோர் கட்டாடா ஒரு கோல் அடிக்க மும்பை அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.