Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“உனது கணவருக்கு அனுப்பி விடுவேன்” பெண் போலீசுக்கு மிரட்டல்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

பெண் போலீசுக்கு ஆபாச புகைப்படம் அனுப்பி தொந்தரவு செய்த சக போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நாங்குநேரியில் போலீஸ்காரரான பாண்டி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு கோவை மாவட்ட ஆயுதப்படையில் பாண்டி பணிபுரிந்து கொண்டிருந்த போது அங்குள்ள பெண் போலீஸ் ஒருவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் அந்த பெண் போலீசுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

இந்நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பெண் போலீஸ் பாண்டியுடன் பேசுவதை நிறுத்திவிட்டார். அதன்பிறகு இருவரும் பிரிந்தனர். இதனை அடுத்து பாண்டி நெல்லை மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதன்பிறகு பெண் போலீஸ் தனது குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் பாண்டி அந்த பெண் போலீசுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து அவருக்கு அனுப்பியுள்ளார்.

மேலும் உனது கணவருக்கும் இதனை அனுப்பி விடுவேன் என கூறி அந்த பெண்ணை மிரட்டியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த பெண் போலீஸ் கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பாண்டி ஆபாச படம் அனுப்பி தொந்தரவு கொடுத்தது உறுதியானது. அதன்பின் காவல்துறையினர் பாண்டியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துவிட்டனர்.

Categories

Tech |