Categories
உலக செய்திகள்

இந்த நாட்டுக்கு சுற்றுலா பயணம் வேண்டவே வேண்டாம்…. ரத்து செய்யப்பட்ட முன்பதிவு…. கடுமையாக பாதிக்கப்பட்ட அரசுத்துறை….!!

தென்னாப்பிரிக்காவில் உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் காரணத்தால் அந்நாட்டின் சுற்றுலாத்துறை மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் உருமாற்றமடைந்த கொரோனாவிற்கு ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஓமிக்ரான் கொரோனா வைரஸ் காரணத்தால் வெளிநாட்டினர் சுற்றுப் பயணத்திற்காக போட்டிருந்த முன்பதிவை ரத்து செய்துள்ளார்கள்.

அதோடு மட்டுமின்றி நெல்சன் மண்டேலா வசித்துவந்த வீட்டையும் காண வருவோரின் எண்ணிக்கை அதிரடியாக குறைந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தென்னாபிரிக்காவின் சுற்றுலாத்துறை மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அதன் ஊழியர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Categories

Tech |