கொரோனா பெரும் தொற்று காரணமாக பல்வேறு நாடுகளுடனான சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. பின்னர் படிப்படியாக தொற்று குறைந்ததை அடுத்து சில நாடுகளுடன் மட்டும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் சர்வதேச விமானங்களை இயக்க முடிவு செய்திருந்தது. இந்நிலையில் மத்திய உள்துறை, வெளியுறவுத்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு அடுத்த மாதம் 15ஆம் தேதி முதல் சர்வதேச விமான போக்குவரத்து சேவையை தொடங்குவதற்கு முடிவு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் சர்வதேச விமான போக்குவரத்துக்கு 2022 ஜனவரி 31ஆம் தேதி வரை தடை நீடிக்கப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. தற்போது ஒமைக்ரான் தொற்று பல உலக நாடுகளில் பரவி வருகின்றது. இதனால் சர்வதேச விமான போக்குவரத்து தொடங்கும் முடிவை ஜனவரி 31ஆம் தேதி வரை ஒத்திவைப்பதாக விமான போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.