நியூசிலாந்து அரசு சிகரெட் விற்பனைக்கு வருகின்ற 2027-ஆம் ஆண்டு முதல் நிரந்தரமாக தடை விதிப்பதாக அதிரடி அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
நியூசிலாந்து நாட்டில் சுமார் 50 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களில் புகை பிடிக்கும் பழக்கத்தால் சிறுவர்களே அதிக அளவில் அடிமையாகி வருவதாக குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வருங்கால சந்ததியினரின் நலனை கருத்தில் கொண்டு நியூசிலாந்து சுகாதாரத்துறை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி 18 வயதை எட்டும் அனைவருக்கும் வருகின்ற 2027-ஆம் ஆண்டு முதல் சிகரெட் விற்பனைக்கு நிரந்தரமாக தடை விதிக்கப்படுகிறது. மேலும் நியூசிலாந்து சுகாதாரத்துறை இணையமைச்சர் ஆயிஷா வெரால் இந்த நடவடிக்கையால் அடுத்த தலைமுறையை ஆரோக்கியமான பாதையில் கொண்டு செல்ல முடியும் என்று தெரிவித்துள்ளார்.