Categories
தேசிய செய்திகள்

சபரிமலையில் ஐயப்ப பக்தர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்…. அதிகாரி அதிரடி உத்தரவு….!!!!

கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று பரவ காரணமாக சபரிமலையில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சபரிமலையில் மண்டல மகரவிளக்கு கால பூஜைகள் நடைபெற உள்ளது. தினமும் 50,000 பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். வருகின்ற 26-ஆம் தேதி மண்டல பூஜையை முன்னிட்டு ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற இருக்கிறது.

மேலும் பம்பை மற்றும் சன்னிதானத்தில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்த உடன்உடன் திரும்ப வேண்டும். பக்தர்கள் சமூக இடைவெளி பின்பற்றுதல், முகக் கவசம் அணிதல், சனிடைசர் கொண்டு கைகளை சுற்றம் செய்தல் போன்றவற்றை பின்பற்ற வேண்டும். இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக சபரிமலையில் கனமழை பெய்து வருகிறது. மழை காரணமாக பம்பையிலிருந்து ஐயப்பன் கோவில் செல்ல முடியாமல் பக்தர்கள் தவித்து வருகின்றனர்.

சமீபத்தில் 3 மணி நேரம் பக்தர்கள் தடுத்து நிறுத்தி வைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மழை நின்றபின் பக்தர்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப் படுகின்றார்கள். எனவே பக்தர்கள் இரவு நேரத்திலும் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து தகவலறிந்த சபரிமலை சிறப்பு அதிகாரி அர்ஜுன் பாண்டி அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தபின், இரவு நேரத்தில் மட்டும் பக்தர்கள் தங்கி கொள்ளலாம் என்று அறிவுறுத்தினார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், சபரிமலையில் பலத்த மழை பெய்யும் போது, பக்தர்கள் இரவு நேரத்தில் தங்கிக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

இதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதற்குரிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். இந்த அறிவிப்பு ஐயப்ப பக்தர்களுக்கு ஆறுதல் அளித்துள்ளது. மண்டலபூஜை தரிசனத்தை முன்னிட்டு வருகின்ற 26-ஆம் தேதி வரை பக்தர்கள் சபரிமலையில் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் மகரவிளக்கு பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 30-ஆம் தேதி முதல் ஜனவரி 20-ஆம் தேதி வரை ஐயப்பன் கோவில் நடை மறுபடியும் திறக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |