Categories
மாநில செய்திகள்

நேர்காணலுக்கு ரெடியா….? டி.என்.பி.எஸ்.சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் தொடங்கும் தேதி குறித்து டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக அரசின் சார்பில் தமிழ்நாடு தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் பதவியில் காலியாக உள்ள இருபத்தி எட்டு பணிகளுக்கு கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இதில் 390 பேர் கலந்து கொண்டனர். இதேபோல் தோட்டக்கலை அலுவலர் பதவியில் காலியாக உள்ள 169 பதவிகளுக்கு ஏப்ரல் 19ஆம் தேதி எழுத்து தேர்வு நடைபெற்றது. இதில் 1,540 பேர் பங்கேற்றனர்.

தற்போது தேர்வு மூலமாக தற்காலிகமாக 384 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் பதிவு எண் கொண்ட பட்டியல் www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நபர்களுக்கு வரும் 20ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை நேர்காணல் நடைபெறும்.  தமிழ்நாடு வேளாண்மை விரிவாக்க பணிகள் வேளாண்மை அலுவலர் பதவியில் காலியாக உள்ள 445 பதவிகளுக்கு கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இதில் 12,000 பேர் கலந்து கொண்டனர். இதில் தற்காலிகமாக 721 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நேர்காணல் வரும் 27ம் தேதி முதல் 30ம் தேதி வரை மற்றும் ஜனவரி 4ஆம் தேதி முதல் 6ம் தேதி வரை நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |