தலைநகர் டெல்லி அனஜ் மண்டி பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் நேற்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 43 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி உட்பட பலரும் இரங்கல் தெரிவித்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தொடர்ந்து, அதே கட்டடத்தில் மீண்டும் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவலறிந்த டெல்லி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Categories