இந்தியாவில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரே தவணையில் அரிசி உட்பட அனைத்து பொருட்களும் வழங்கப்பட வேண்டும் என்று உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையிட்டுள்ளது. இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தியாவில் சென்ற ஆண்டு கொரோனா பரவல் உச்சத்தில் இருந்ததால், மார்ச் மாதம் முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதனால் கோடிக்கணக்கான ஏழை, எளிய மக்கள் உணவு இல்லாமல் அல்லல் பட்டனர்.
குறிப்பாக புலம்பெயர் தொழிலாளர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டனர். அதனால் மத்திய அரசு மக்களுக்கு பயனளிக்கும் வகையில் பிரதமர் ஹரிஸ் கல்யாண் அன்னயோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அந்தத் திட்டத்தின்படி, 80.96 கோடி பேர் பயன் அடைந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் மானிய விலை உணவு தானியத்திற்கு மேல் ஒவ்வொருவருக்கும் கூடுதலாக 5 கிலோ அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருள்கள் இலவசமாக வழங்க ஆணையிடப்பட்டது.
இந்தத்திட்டம் 3 மாதங்கள் மட்டும் செயல்படுத்தப்பட்டன. இதையடுத்து 2-வது அலையின் காரணமாகவும் இந்த நடைமுறை தொடரப்பட்டது. இந்த நிலையில் பிரதமர் ஹரிஷ் கல்யாண் யோஜனா திட்டத்தின் மூலம் வழங்கப்படும் அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரே தவணையில் வழங்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புதுறை உத்தரவிட்டுள்ளது.