கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நல்லகாணகொத்தபள்ளி கிராமத்தில் ஈஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுரேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சுரேஷ் அடிக்கடி செல்போனில் பேசி கொண்டே இருந்துள்ளார். இதனை சுரேஷின் தாயார் கண்டித்துள்ளார்.
இதனால் மன உளைச்சலில் இருந்த சுரேஷ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சுரேஷின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.