Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அட்டகாசம் செய்யும் குரங்குகள்…. சிரமப்படும் பொதுமக்கள்…. வனத்துறையினரின் முயற்சி…!!

அட்டகாசம் செய்யும் குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒன்னதலை கிராமத்தில் ஏராளமான குரங்குகள் சுற்றி திரிகிறது. இந்த குரங்குகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து உணவுப்பொருட்களைத் தின்று நாசப்படுத்தி வருகிறது. எனவே அட்டகாசம் செய்யும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதன்படி கிராமத்தில் இருக்கும் 2 இடங்களில் வனத்துறையினர் குரங்குகளை பிடிப்பதற்காக கூண்டு வைத்துள்ளனர். அதன் பலனாக சுமார் 35-க்கும் மேற்பட்ட குரங்குகள் கூண்டில் சிக்கிவிட்டது. இதனையடுத்து வனத்துறையினர் அந்த குரங்குகளை அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்று விடுவித்தனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இப்பகுதியில் 100 குரங்குகள் கூண்டு வைத்து பிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |