தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து, அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து வருகின்ற டிசம்பர் 14ஆம் தேதி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட உள்ளது. அந்தக் கோவிலில் ஒவ்வொரு வருடமும் வைகுண்ட ஏகாதேசி உற்சவம் 21 நாட்கள் நடைபெறும்.
தற்போது இந்த ஆண்டில் கடந்த டிசம்பர் 3ஆம் தேதி இரவு திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதன்படி டிசம்பர் 24ஆம் தேதியன்று நம்மாழ்வார் மோட்சவத்துடன் வைகுண்ட ஏகாதசி உற்சவம் முடிவடைகிறது. இதில் வருகின்ற டிசம்பர் 14 ஆம் தேதி அன்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட உள்ளதால் அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
இதனைக் கருத்தில் கொண்டே திருச்சியில் வருகின்ற 14ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என்று அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதன்படி அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த வேலை நாளை சரிசெய்யும் விதமாக வருகின்ற டிசம்பர் 18ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.