Categories
தேசிய செய்திகள்

மக்களே…. இந்த வங்கியில் இனி பணம் எடுக்க தடை…. ரிசர்வ் வங்கி போட்ட அதிரடி உத்தரவு…!!!!

நாட்டின் அனைத்து வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இதன் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து வங்கிகளும் விதிமுறைகளை மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கிறது. அதன்படி தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் இயங்கி வரும் அர்பன் கூட்டுறவு வங்கி ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு விதித்துள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் இனி 10,000 வரை மட்டுமே பணம் எடுக்க முடியும்.இந்த உத்தரவு டிசம்பர் 6ஆம் தேதி முதல் அடுத்த ஆறு மாத காலம் வரை நீடிக்கும்.

அதனைத் தொடர்ந்து இந்த வங்கியில் இனி பணம் போடவும் மற்றும் வங்கி கடன் வழங்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே நாகர் அர்பன் கூட்டுறவு வங்கி ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் இல்லாமல் இனி யாருக்கும் கடன் கொடுக்கவும், முதலீடுகளை ஈர்க்கவும் மற்றும் முதலீடு செய்யவும் முடியாது. ஆனால் வங்கியில் பணம் டெபாஸிட் செய்தவர்களுக்கு டெபாசிட் இன்சூரன்ஸ் பணம் வழங்கப்படும். அதனால் வங்கியில் பணம் டெபாசிட் செய்தவர்கள் பயப்பட வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Categories

Tech |