தற்கொலை செய்து கொண்ட ஆசிரியர் எழுதிய 4 பக்க கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள தொட்டியம் அருகில் கொசவம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக இந்த பள்ளியில் வரலாற்று ஆசிரியராக சிவகுமார் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். திருமணமாகாத சிவகுமார் தொட்டியத்தில் தனது தாயார் பொற்றாமரை என்பவருடன் தங்கியுள்ளார். இந்நிலையில் சிவகுமார் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து மயங்கி கிடந்த சிவக்குமாரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
ஆனால் கடந்த 30-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி சிவகுமார் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிவகுமார் எழுதிய 4 பக்க கடிதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தியுள்ளனர். இந்நிலையில் தனது சாவுக்கு காரணம் சக ஆசிரியர்களின் மிரட்டலை என மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு சிவகுமார் அந்த கடிதத்தில் எழுதியுள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.