லாரி சக்கரத்தில் சிக்கி கூலித்தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டமானடி கிராமத்தில் கூலி தொழிலாளியான கலிய பெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் பிரபாகரன் என்பவருக்கு சொந்தமான நிலத்தின் வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென மழை பெய்ததால் கலியபெருமாள் அங்கு நின்று கொண்டிருந்த லாரியின் கீழ் ஒதுங்கியுள்ளார்.
இந்நிலையில் கலியபெருமாள் இருப்பதை பார்க்காமல் ஓட்டுனர் லாரியை இயக்கியதால் சக்கரத்தில் சிக்கி அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கலியபெருமாளின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.