Categories
மாநில செய்திகள்

பொதுத்தேர்வு எழுத இவர்களுக்கு அனுமதி இல்லை…. அரசு வெளியிட்ட ஷாக் நியூஸ்….!!!!

தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றாலும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெறாமல் பிளஸ் 2 வகுப்புக்கான ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் வழங்கப்படுவதில்லை. மேலும் பிளஸ் 1 தேர்வு எழுதாதவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுத அனுமதிக்கப்படுவதில்லை.

அதன்படி மத்திய இடைநிலை கல்வி வாரியம் சி.பி.எஸ்.இ. மற்றும் பிற மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 1 வரை படித்துவிட்டு தமிழக பாடத்திட்டத்தில் பிளஸ் 2 சேர்ந்த மாணவர்களுக்கு இந்த ஆண்டு பொதுத் தேர்வு எழுத அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வு இயக்குனர் சேதுராம வர்மா சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் விவரங்களில் பிழை ஏதும் இருந்தால் எமிஸ் இணையதளத்தில் திருத்தம் செய்ய வேண்டும்.

அதனைத் தொடர்ந்து பிளஸ் 1 படித்து பொது தேர்வு எழுதிவிட்டு இடையில் நின்று மீண்டும் பள்ளியில் சேர்ந்த பிளஸ் 2 மாணவர்களின் பெயரை நடப்பு கல்வி ஆண்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வு பட்டியலில் சேர்க்க இயலாது. மேலும் சிபிஎஸ்இ மற்றும் பிற மாநில பாடத்திட்டத்தில் சேர்ந்து பிளஸ் 1 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட பள்ளிகளில் படித்தால் அவர்களின் பிளஸ் 2 படித்தால், தேர்வு பட்டியலில் அவர்களின் பெயர் சேர்க்கக் கூடாது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |