Categories
உலக செய்திகள்

‘எங்களுக்கு சுதந்திரம் வேண்டும்’…. முழக்கங்களை எழுப்பிய பொதுமக்கள்….!!

தடுப்பூசி கட்டாயமாக்கப்படுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பியுள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா தொற்று  பரவலானது அதிக பாதிப்பினை ஏற்படுத்தியது. மேலும் அதன் முதல், இரண்டாம், மூன்றாம் அலைகளினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஜெர்மனியில் கொரோனா தொற்றின் நான்காவது அலை பரவத் தொடங்கியுள்ளது.

இதன் காரணமாக வருகின்ற ஜனவரி மாதம் முதல் பொதுமக்கள் கட்டாயமாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று ஜெர்மனியின் பிரதமரான ஓலாஃப் ஸ்கால்ஸ் தலைமையிலான அரசு வலியுறுத்தியுள்ளது.

இதனை எதிர்த்து முனிச் நகரில் ஏராளமான பொதுமக்கள் பேரணியாக சென்றுள்ளனர். மேலும் விட்டல்ஸ்பர்க் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ‘எங்களுக்கு சுதந்திரம் வேண்டும்’ என்று முழக்கங்களை எழுப்பியுள்ளனர்.

Categories

Tech |