‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் எலிமினேஷன் ஆக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 5 வது சீசன் தற்போது 50 நாட்களை கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில், இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு பின்னர் குணமடைந்து, மீண்டும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இதனையடுத்து, பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் அபிஷேக் ராஜா எலிமினேஷன் ஆனார். இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் எலிமினேஷன் ஆக இருப்பதாக அதிரடி தகவல் வெளியாகியுள்ளது.