வட கிழக்கு பருவ காற்று காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையும், ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்யும். நாளைய தினம் கடலோர மற்றும் அதை ஒட்டிய உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை எச்சரித்துள்ளது.