Categories
தேசிய செய்திகள்

BREAKING : 17 குண்டுகள் முழங்க…. முழு ராணுவ மரியாதையுடன்…. சற்றுமுன் பிபின் ராவத் உடல் தகனம்….!!!!

தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் நேற்று முன்தினம் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேர் மரணமடைந்தனர்.. இதில் குரூப் கேப்டன் வருண் சிங் மட்டும் பெங்களூரு விமானப்படை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்..

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேரின் உடல்களும் நேற்று வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி மைதானத்தில் வைக்கப்பட்டது. தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பிபின் ராவத் உட்பட 13 பேரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்..

அதனை தொடர்ந்து 13 பேரின் உடல்களும், தனித்தனி ஆம்புலன்ஸ் மூலம் சூலூர் விமானப்படை தளத்திற்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து நேற்று இரவு 8 மணியளவில் டெல்லி பாலம் விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது.. அங்கு பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்புத் துறை ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் முப்படை தளபதிகள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்..

மேலும் பிபின் ராவத்தின் மகள்கள் இருவரும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.. இதையடுத்து இன்று காலை உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, திமுக எம்பிக்கள் உள்ளிட்டோர் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அதேபோல பிபின் ராவத்தின் இல்லத்தில் காலை 11 மணி முதல் 12 : 30 மணி வரை பொதுமக்களும், 12:30 மணி முதல் 1:30 மணி வரை ராணுவ அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்..

இதையடுத்து தலைமை தளபதி பிபின் ராவத் அவரது மனைவி மதுலிகா ராவத் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. காமராஜ் மார்க் வழியாக டெல்லி கன்டோன்மென்ட் மயானத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான மக்கள் மலர்தூவி, தேசியக் கொடியை கையில் ஏந்தியவாறு முழக்கம் எழுப்பி அஞ்சலி செலுத்தினர்..

இந்நிலையில் பல்வேறு உயர் அதிகாரிகள் பிபின் ராவத் மற்றும் மனைவி மதுலிகா ராவத் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி முடித்த நிலையில் தற்போது அவர் இருவர்களின் உடல்களும் தகன மேடைக்கு கொண்டுவரப்பட்டு அவர்கள் மேல் போர்த்தி இருந்த மூவர்ண கொடி உரிய முறையுடன் எடுக்கப்பட்டு அவரது மகள்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் ஒரே தகன மேடையில் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் உடல்கள் வைக்கப்பட்டிருந்தது. தற்போது முழு ராணுவ மரியாதையுடன் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் உடல் தகனம் செய்யப்பட்டது.

Categories

Tech |