இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள அங்கேரிபாளையம் பகுதியில் குட்டு குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பனியன் நிறுவன டெய்லராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுமித்ரா என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் சுமித்ரா கணவனிடம் தனது தாய் வீட்டிற்கு செல்ல வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு குட்டு குமார் காலையில் செல்லலாம் என கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் குட்டுகுமார் வெளியே சென்றபோது வீட்டில் தனியாக இருந்த சுமித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த அனுப்பர்பாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமித்ராவின் உடலை உடனடியாக மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.