Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மொத்தம் ரூ.33 லட்சம்…. நடைபெற்ற பருத்தி ஏலம்…. வியாபாரிகள் மகிழ்ச்சி….!!

கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ரூ.33 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவிநாசி பகுதியில் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரம் ஒருநாள் பருத்தி ஏலம் நடைபெறும். இந்நிலையில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. அதில் 1307 மூட்டை பருத்தி வந்திருந்தது.

இதில் டி.சி.எச் ரகப் பருத்தி குவிண்டால் ரூ.9 ஆயிரம் முதல் ரூ.11,606 வரையிலும், ஆர்.சி.எச் ரகப் பருத்தி குவிண்டால் ரூ.8,000 முதல் ரூ.9272 வரையிலும் விற்றது. இதனையடுத்து மட்டரகப்பருத்தி  ரூ.2000 முதல் ரூ.3560 வரையிலும் வியாபாரிகள் ஏலத்தில் எடுத்துள்ளனர். இந்த ஏலத்தின் மொத்த மதிப்பு ரூ.33 லட்சம் ஆகும். இதனை சங்க மேலாண்மை இயக்குனர் சரவணகுமார் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |