மோட்டார் சைக்கிள் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
மயிலாடுதுறை மாவட்டம் அரங்கக்குடி இக்பால் தெருவை சேர்ந்த ரஹமத்துல்நிஷா என்பவரின் மகன் யூசுப்கான்(வயது 19). இவர் மன்னம்பந்தல் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார் .தந்தை இறந்து விட்டதால் தன் தாயுடன் வசித்து வந்துள்ளார் .இந்நிலையில் சம்பவ தினத்தன்று மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார் .
அப்போது தருமபுரம் பர்மா காலனி அருகே சென்று கொண்டிருந்தபோது தனியார் பேருந்து ஒன்று யூசுப்கான் மீது மோதியுள்ளது .இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார் .இதுகுறித்து வழக்கு பதிவு செய்த மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் இருவரையும் கைது செய்துள்ளனர்.