மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 7 பேருக்கு மைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக நாடுகளில் ஒமைக்ரான் தொற்று தற்போது தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவை பொருத்தவரை ஒமைக்ரான் தொற்று தற்போது படிப்படியாக பரவ தொடங்கியுள்ளது. நாட்டில் ஏற்கனவே 25 பேருக்கு மைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று மட்டும் மேலும் 7 பேருக்கு மைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்தியாவில் தற்போது வரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் ஒரே நாளில் 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Categories