டிராக்டரில் இருந்து கீழே தவறி விழுந்த பெண் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள அத்திப்பலகானூரில் ஜெயராமன் என்பவர் வாசித்து வந்துள்ளார். டிராக்டர் டிரைவரான இவருக்கு மாலதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ஜெயராமன் கட்டு கற்களை டிராக்டரில் ஏற்றிக்கொண்டு நமகிரிபேட்டை அருகே உள்ள தொப்பபட்டிக்கு சென்றுள்ளார். அந்த டிராக்டரில் ஜெயராமனின் மனைவி மாலதியும் சென்றார். இதனையடுத்து கற்களை தொப்பபட்டி இறக்கி விட்டு மீண்டும் ராசிபுரத்தை நோக்கி சென்றுள்ளனர்.
இந்நிலையில் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள வேலம்பாளையம் அருகே சென்று கொண்டிருந்தபோது வேகத்தடை மீது டிராக்டர் ஏறி இறங்கியுள்ளது. அப்போது டிராக்டரில் அமர்ந்திருந்த மாலதி திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்த்துள்ளர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஜெயராமன் உடனடியாக மாலதியை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். ஆனால் மாலதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த நாமகிரிப்பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.