தமிழகத்தில் அரசு இ-சேவை மையங்கள் இல்லாத கிராமங்களில் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை இயக்கம் சார்பில் சேவை மையங்கள் ஆரம்பிக்கப்பட உள்ளன. இதுபற்றி மின் ஆளுமை முகமை இயக்கத் தலைமை செயல் அதிகாரி கே. விஜயேந்திர பாண்டியன் பேசியதாவது, தமிழகத்தில் 12,500 கிராமங்கள் இருக்கிறது. அந்த கிராமங்களில், தற்போது 5,000 கிராமங்களில் மட்டுமே அரசு இ-சேவை மையங்கள் செயல்படுகிறது.
மேலும் மீதமுள்ள கிராமங்களில் மின் ஆளுமை முகமை இயக்கம் சார்பில் இ-சேவை மையங்கள் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. இ-சேவை மையம் ஆரம்பிப்பதற்கு தேவையான வசதிகள் உள்ள நபர்களுக்கு அவற்றிற்கான அனுமதி அளிக்கப்படும். மேலும் இந்த மையங்களில் அரசு சேவைகள் மட்டுமல்லாமல் வேறு பல சேவைகள் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ள என்று அவர் கூறியுள்ளார்.