மீரா ஜாஸ்மின் நடனமாடி அசத்திய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை மீரா ஜாஸ்மின் தமிழில் வெளியான ”ரன்” படத்தின் மூலம் அறிமுகமானார். இதனையடுத்து, சண்டக்கோழி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இது மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களிலும் பிசியாக நடித்துக் கொண்டிருந்தார்.
இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு அனில் ஜான் என்பவரை திருமணம் செய்தார். திருமணத்துக்குப் பின்னர் இவர் தற்போது 7 வருடங்களுக்குப்பின் மீண்டும் நடிக்க வந்துள்ளார். இந்நிலையில், இவர் நடனமாடி அசத்திய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ரசிகர்கள் பலர் சமூக வலைத்தளத்தில் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.
https://www.instagram.com/p/CXQTF0XprlX/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again