தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் மனசு என்று எழுதப்பட்ட பாலியல் புகார் பெட்டி அமைக்க வேண்டும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பள்ளி மாணவிகள் அதிக அளவில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவது போன்றவற்றைத் தடுப்பதற்கு தமிழக அரசு சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு போக்சோ சட்டம் குறித்து அறிவுறுத்த வேண்டும் என்றும், பாலியல் தொடர்பாக புகார் அளிக்க இலவச எண்கள் போன்ற பல்வேறு திட்டங்களை பள்ளிக்கல்வித் துறை செய்து வருகிறது.
இந்நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் “மாணவர் மனசு” என்று எழுதப்பட்ட பாலியல் புகார் பெட்டிகளை வரும் 31ம் தேதிக்குள் அமைக்க வேண்டும் என்று தமிழக பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் 37 ஆயிரத்து 356 பள்ளிகளிலும் மாணவர் மனசு பெட்டியில் வரும் புகார் மீது 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.