தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் .
நாகை மாவட்டம் வெளிப்பாளையத்துக்கு உட்பட்ட பகுதியில் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர் .
இந்த விசாரணையில் அவர் செல்லூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த ரீகன் என்பதும் அவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர் .இதேபோல் ரெயிலடி தெருவில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த பரமன் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.