ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்ற எலக்ட்ரீசியன் மீது இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் நேரு நகர் 10-வது தெருவில் கல்யாணகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். எலக்ட்ரீசியனான இவர் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கல்யாணகுமார் வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டு மீண்டும் மாலையில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது பட்டணம்காத்தான் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் கல்யாணகுமார் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அப்பகுதி வழியாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று நிலை தடுமாறி திடீரென கல்யாணகுமார் மீது மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த பட்டணம்காத்தான் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.