100 நாள் வேலை வாய்ப்பு முறையாக வழங்க வேண்டும் என ஏராளமான பெண்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்துள்ள செல்வநாயகபுரம் ஊராட்சியில் 100 நாள் வேலை வாய்ப்பு தற்போது முறையாக வழங்கப்படுவதில்லை என அப்பகுதி பெண்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். இதுவரையிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் அவர்கள் செல்வநாயகபுரம் ஊராட்சியில் 100 நாள் வேலை வாய்ப்பு முறையாக வழங்கப்பட வேண்டும், வேலை செய்ததற்கு உரிய சம்பளம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை அறிந்த ஒன்றிய ஆணையர் ராஜேந்திரன் மற்றும் துணை ஆணையாளர் கருப்பையா பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்த பின்னரே தர்ணாவில் ஈடுபட்ட பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது