சென்ட்ரிங் சீட் விழுந்து வடமாநில தொழிலாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள திருப்பாற்கடல் பாலாற்றில் இருந்து திருத்தணிக்கு நகருக்கு கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் இருக்கும் கிருஷ்ணாபுரம் அருகாமையில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டும் பணி நடைபெற்று இருக்கிறது. இவற்றில் ஜார்கண்ட் மாநிலத்தில் வசிக்கும் தொழிலாளர்கள் கடந்த சில மாதங்களாக ஈடுபட்டு வருகின்றனர். அந்நேரம் எதிர்பாராவிதமாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மேல் இருந்து சென்ட்ரிங் சீட் சரிந்து ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த கிராண்டிபஸ்வான் மற்றும் கம்டாராம் ஆகியோர் மீது விழுந்துள்ளது.
இதில் படுகாயமடைந்த கம்டாராம் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பின்னர் படுகாயமடைந்த கிராண்டிபஸ்வான் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கம்டாராம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.