Categories
உலக செய்திகள்

வலைத்தளங்களில் பிரபலமாக வாலிபர் செய்த அதிர்ச்சி செயல்..!!

மனிதனாக பிறந்த எல்லோருக்குமே மக்களின் மத்தியில் பிரபலமாக வேண்டும் ,  நம்மை பிறர்  பாராட்ட வேண்டும், புகழ வேண்டும் என்ற ஆசை  ஒரு முறையாவது வருவது இயல்புதான் . நல்லதை செய்து பிரபலமானால் தான் சமூகம் நம்மை பாராட்டும், பிரபலமாவதற்கும் ஒரு அர்த்தம் கிடைக்கும்.

ஆனால் இங்கிலாந்து நாட்டை சார்ந்த ஒருவன் மக்கள் மத்தியில் பிரபலமாவதற்கு  செய்த காரியம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இங்கிலாந்து தலைநகரமான  லண்டனின் மேற்கு பகுதியில் உள்ள ஈலிங் நகரை சேர்ந்தவன்  ஜான்டி பிரேவரி (Jonty Bravery). இவனுக்கு தற்போது பதினெட்டு  வயது. இவன் கடந்த ஆகஸ்ட் மாதம் டேட் மாடர்ன் என்ற  அருங்காட்சியகத்துக்கு சென்றான். அப்போது அங்கு  பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தாய் ஒருவர் தனது ஆறு  வயது மகனுடன் வந்திருந்தார்.

அப்போது அச்சிறுவனை நீண்ட நேரம்  பார்த்துக்கொண்டிருந்த ஜான்டி பிரேவரி, அந்த தாய் சற்று  அசந்த நேரம் பார்த்து விருட்டென்று அச்சிறுவனை தூக்கி கொண்டு ஓடியுள்ளான். இதை கண்டு அதிர்ந்து போன அச்சிறுவனின் தாய் மற்றும் அருகில் இருந்தவர்கள்  அவனை விரட்டி பிடிக்க முயற்சி செய்துள்ளனர்  .ஆனால் யார் கையிலும் சிக்காத ஜான்டி நேராக பத்தாவது  மாடிக்கு சென்று அச்சிறுவனை தூக்கி வீசியுள்ளான். வீசப்பட்ட அச்சிறுவன் ஐந்தாவது  மாடியின் மேற்கூரையில்  விழுந்து படுகாயமடைந்தான்.

இந்த எதிர்பாராத சம்பவத்தால் முதுகு, கைகால்களில் எலும்பு முறிவுகள் மற்றும் மூளையில் இரத்தப்போக்கு உள்ளிட்ட பலகாயங்களுடன் உயிருக்கு போராடும்  நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான் அந்த சிறுவன். அச்சிறுவனுக்கு  இரண்டு பெரிய அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் சிறுவனால் தற்போது வரை அசையவோ, பேசவோ முடியவில்லை. அடிக்கடி உயிருக்கு போராடும் நிலைக்கு சென்று விடுவதாக குடும்பத்தினர் கவலை தெரிவித்தனர்.

இந்த கொடூர செயலில் ஈடுபட்ட ஜான்டி பிரேவரியை கைது செய்த காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் . சிறுவனை ஏன் அவன் தூக்கி எறிவதற்கான  காரணத்தை கேட்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள் .வாக்குமூலத்தில் எனக்கு எந்த மனநலப் பிரச்சினையும் இல்லை என்று கூறிய “ஒவ்வொரு முட்டாள்களுக்கும்  என்னை நிரூபிக்க வேண்டும் என்று நினைத்தேன்”. மேலும் என்னை பற்றி வலைத்தளங்கல்  மற்றும் பத்திரிகைகளில் செய்தி வந்து நான் ஒரே நாளில் பிரபலமாக வேண்டும் என்றும் விரும்பினேன்.அதற்குத்தான்  இந்த செயலை செய்ததாக கூறினான் ஜான்டி பிரேவரி.

மேலும்  நீதிமன்றத்தில் நடத்திய விசாரணையின் போதும் எவ்வித தயக்கமும் இன்றி சிரித்து கொண்டே தனது குற்றத்தை ஒப்பு கொண்டுள்ளான்.இதையடுத்து  அவனை குற்றவாளி என்று அறிவித்த நீதிபதி அவனுக்கான தண்டனை வரும் பிப்ரவரி மாதம் அறிவிக்கப்படும் என கூறியுள்ளார். குற்றத்தை செய்தபோது ஜான்டி பிரேவரிக்கு வயது வெறும் பதினேழுதான் .கடந்த வாரம் தான் அவனுக்கு பதினெட்டு  வயது முடிந்தது . இதனை அடுத்தே இந்த குற்ற சம்பவத்தை செய்தது ஜான்டி பிரேவரி என்று வெளியுலகிற்கு அடையாளம் காட்டப்பட்டுள்ளனர் .

Categories

Tech |