மெக்சிகோவில் சரக்கு லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக பாலத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 51 பேர் பலியாகியுள்ளனர்.
மெக்சிகோவில் கிட்டதட்ட 107 பேரை ஏற்றிக்கொண்டு சரக்கு லாரி ஒன்று சியாபாஸ் மாநில தலைநகர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இதையடுத்து அந்த சரக்கு லாரி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக பாலத்தில் வேகமாக மோதியுள்ளது. இந்த சம்பவத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 53 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்று சியாபாஸ் சிவில் பாதுகாப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும் 57 பேர் காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சியாபாஸ் சிவில் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் லுரிஸ் மனுவெல், சியாபாஸ் மாநிலத்தில் உள்ள டக்ஸ்ட்லா குட்டிரெஸ் நகருக்கு வெளியே ஆபத்தான வளைவினை கடக்கும் போது தான் இந்த விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.