மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில், அங்குள்ள பள்ளிகள் வரும் டிசம்பர் 13 முதல் மீண்டும் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. மகாராஷ்டிராவில், கொரோனா தொற்றினால், புதிதாக 289 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 7 பேர் இறந்துள்ளதாகவும், அதே நேரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் புதிதாக பரவிவரும் மைக்ரான் தொற்று ஏதும் இல்லை என்றும், சுகாதாரத்துறை நேற்று அறிவித்திருந்தது.
மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் கோவிட்-19 மீட்பு விகிதம் 97.72%, இறப்பு விகிதம் 2.22% உள்ளது. முன்னதாக, செப்டம்பர் மாதம் கிராமப்புறங்களில் 5 முதல் 8- ஆம் வகுப்புகளுக்கும் நகர்ப்புறங்களில் 8 முதல் 11 ஆம் வகுப்புகளுக்கும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. இதையடுத்து நோய் பாதிப்பால் பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டது.
முதல்வர் உத்தவ் தாக்கரே, அமைச்சரவை மற்றும் குழந்தைகள் நல பணி குழுவுடன் கலந்தாலோசித்து பிறகு டிசம்பர் 1-ஆம் தேதி முதல் கிராமப்புறங்களில் 1 முதல் 4-ஆம் வகுப்பு வரையிலும், நகர்புறங்களில் 1 முதல் 7-ஆம் வகுப்பு வரையிலும், பள்ளிகள் மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளோம் என்று மாநில கல்வி அமைச்சர் கூறியுள்ளார்.