Categories
உலக செய்திகள்

எரிமலை வெடித்து ஐந்து பேர் பலி …..!!

நியூசிலாந்திலுள்ள  வெள்ளைத் தீவில் எரிமலை ஒன்று வெடித்து சிதறிய விபத்தில் ஐந்து நபர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது .

எரிமலைகள்  நிரம்பிய வெள்ளைத் தீவை சுற்றிப்பார்ப்பதற்காக சுற்றுலா பயணிகளை படகுகளில் அழைத்துச் செல்லப்பட்டனர்  . இந்த நிலையில்  , அங்கு திடீரென்று  எரிமலை ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது அதில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 20  சுற்றுலா பயணிகள் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்நிலையில் .தற்போது அங்கு புகை மூட்டம் அதிகமாக இருப்பதால் அசாதாரண நிலை  நிலவுகிறது ,அதனால்  மீட்பு பணியில் சிறிது  கடினம்  ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர்  தெரிவித்துள்ளனர்  .

Categories

Tech |