Categories
அரசியல் மாநில செய்திகள்

EPS கார் மீது செருப்பை எரிந்தது நாங்களா.. கொந்தளித்த TTV தினகரன் …!!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் சென்ற இடத்தில முன்னாள் முதல்வரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கார் மீது செருப்பு வீசியது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சார்ந்தவர் கைது செய்யப்பட்டு இருக்கின்றார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன்,

இவர்களால் அதிமுகவுக்கு மக்கள் மத்தியில் பெரிய கெட்ட பெயர் இருப்பதனால் அதை திசை திருப்பும் விதமாக நான் தூண்டி எங்கள் தொண்டர்கள் அவர்களை தாக்கியதாக ஒரு பொய்யான புகாரைக் கொடுத்து விட்டு தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தி மக்களை திசை திருப்பப் பார்க்கிறார்கள், இது எல்லோருக்குமே தெரியும்.

புரட்சித் தலைவரும், இதயதெய்வம் அம்மா அவர்களும் துயில் கொள்கின்ற அந்த புனிதமான இடத்தில், அந்த மாதிரி ஒரு கீழ்த்தரமான நடவடிக்கைகளை நாங்கள் ஈடுபட மாட்டோம் என்பது உங்களுக்கு தெரியும், இருந்தாலும் அவர்கள் இதை திசைதிருப்பும் உட்கட்சி பிரச்சனைகள், மக்கள் மத்தியில் தவறான உண்மையை…  அதாவது அவர்கள் பற்றிய உண்மைகளை மக்கள் புரிந்து கொள்ளக் கூடாது அந்த கருத்து போய் சேர்ந்திருக்கிறது. தொலைக்காட்சிகள் மூலமே அவர்கள் அடித்து விரட்டப்பட்டது, தவறான நடவடிக்கை எல்லாம் மக்களை சேர்ந்திருப்பதால் மக்களை திசை திருப்புவதற்காக இந்த மாதிரி பொய் பிரச்சாரங்களை செய்திருக்கிறார்கள் என தெரிவித்தார்.

Categories

Tech |