செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரனிடம், அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை மீண்டும் தேர்தெடுத்துள்ளார்கள், வேற யாரையும் விருப்பமனு தாக்கல் செய்ய விடல, அதிமுக தலைமை அலுவலகத்திலும் பிரச்சனை நடந்துள்ளது. இதை எப்படி பார்க்கின்றீர்கள் ? என்ற கேள்விக்கு பதிலளித்த டிடிவி தினகரன்,
கேலிக்கூத்தாக இருக்குது என்று சொல்வார்கள் அல்லவா… நான் அன்னைக்கே சொன்னேன், இது வந்து குரங்குகள் கையில் சிக்கிய பூமாலையாக இன்றைக்கு அந்த கட்சியினுடைய நிலை இருக்கிறது என்று அன்றைக்கே சொன்னேன், அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. இந்த கேளி கூத்தை அங்கே தலைமை கழகத்திலேயே குண்டர்களை ஏவி தொண்டர்களை தாக்குவது எல்லாம் தொலைக்காட்சியில் பார்த்து இருப்பீர்கள்.
அதனால் மக்கள் மத்தியில் பெரிய கெட்ட பெயர் இருப்பதனால் அதை திசை திருப்பும் விதமாக நான் தூண்டி எங்கள் தொண்டர்கள் அவர்களை தாக்கியதாக ஒரு பொய்யான புகாரைக் கொடுத்து விட்டு தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தி மக்களை திசை திருப்பப் பார்க்கிறார்கள், இது எல்லோருக்குமே தெரியும்.
புரட்சித் தலைவரும், இதயதெய்வம் அம்மா அவர்களும் துயில் கொள்கின்ற அந்த புனிதமான இடத்தில், அந்த மாதிரி ஒரு கீழ்த்தரமான நடவடிக்கைகளை நாங்கள் ஈடுபட மாட்டோம் என்பது உங்களுக்கு தெரியும், இருந்தாலும் அவர்கள் இதை திசைதிருப்பும் உட்கட்சி பிரச்சனைகள், மக்கள் மத்தியில் தவறான உண்மையை…
அதாவது அவர்கள் பற்றிய உண்மைகளை மக்கள் புரிந்து கொள்ளக் கூடாது அந்த கருத்து போய் சேர்ந்திருக்கிறது. தொலைக்காட்சிகள் மூலமே அவர்கள் அடித்து விரட்டப்பட்டது, தவறான நடவடிக்கை எல்லாம் மக்களை சேர்ந்திருப்பதால் மக்களை திசை திருப்புவதற்காக இந்த மாதிரி பொய் பிரச்சாரங்களை செய்திருக்கிறார்கள் என விமர்சித்தார்.